ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து புதுவை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!!
புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் லெனின் வீதி-, காமராஜர் வீதி சந்திப்பு சாரம் பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க.வை பற்றியும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்த ஓ.பன்னீர் செல்வத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு புதுவை மாநில செயலாளர் அன்பழகன், தலைமை வகித்தார். அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில அ.தி.மு.க. துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், மகாதேவி, மாநில பொருளா ளர் ரவிபாண்டுரங்கன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலா ளர்கள் எம்.ஏ.கே.கருணா நிதி, பி எல். கணேசன், குணசேகரன், வி.கே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, நாகமணி, ஜெய.சேரன், குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலா ளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மேற்கு மாநில எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, மேற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்பு சாமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உள்பட தொகுதி செயலாளர்கள், அணி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டம், இது ஆர்ப்பாட்டம், துரோகி களின் முகத்திரையை கிழிக்கும் ஆர்ப்பாட்டம். உச்சரிக்காதே, உச்சரிக்காதே அ.தி.மு.க. பெயரை உச்சரிக் காதே, பயன்படுத்தாதே, பயன்படுத்தாதே, கட்சி கொடி, கட்சித்தலைவர், அம்மா, கட்சியின் பெயரை உச்சரிக்காதே, அவம திக்காதே, அவமதிக்காதே, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அவமதிக்காதே, தேர்தல் ஆணையத்தின் முடிவை அவமதிக்காதே என கோஷங்கள் எழுப்பப் பட்டது.