உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தும்- கெஜ்ரிவால்!!
அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். மோடி குடும்பப்பெயர் குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக் கோரிய ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று நிறுத்தி வைத்தது.
உச்சநீதிமன்றத்தின் தீர்பை வரவேற்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ராகுல் காந்திக்கு எதிரான அநியாயமான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை நான் வரவேற்கிறேன். இது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அவருக்கும் வயநாடு மக்களுக்கும் வாழ்த்துக்கள்” என்றிருந்தது.