ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவு!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. குல்மார்க்கிலிருந்து சுமார் 184 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 129 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு ரிக்டர் அளவுகளில் 12 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக, ஜூலை 10 ஆம் தேதி அதிகாலை ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜூன் 13 அன்று தோடா மாவட்டத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, வீடுகள் உட்பட டஜன் கணக்கான கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.