கேரளாவை சேர்ந்த நிதி அதிகாரியிடம் போலி வாட்ஸ் அப் அழைப்பு மூலம் ரூ.40 லட்சம் மோசடி- 4 பேர் கைது!!
இருப்பினும் அவர், நிறுவன உரிமையாளரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி அவர் 2 தவணைகளாக ரூ.40 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதன்பிறகு போலி வாட்ஸ் அப் அழைப்பு மூலம் பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் திருக்காக்கரா போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து கொச்சி நகர சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மற்றும் குஷிநகர் மாவட்டங்களில் இருந்து மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விபின்குமார் மிஸ்ரா (வயது 22), தீரஜ்குமார் (35), உம்மத் அலி (26), சாக்சி மவுலிராஜ் (27) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கைதான 4 பேரும் மாநிலங்களுக்கு இடையே ஆன்லைன் நிதி குற்றங்களில் ஆன்லைன் ஈடுபட்டுள்ளவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சாக்சி மவுலிராஜ் மீது ஏற்கனவே 3 சைபர் கிரைம் வழக்குகளும், உம்மத் அலி மீது கற்பழிப்பு மற்றும் திருட்டு வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.