ரக்பி பார்த்தார் ஜனாதிபதி ரணில்!!
கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான 77வது வருடாந்த பிராட்பி ஷீல்ட் ரக்பி போட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.
கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான போட்டி இலங்கைப் பாடசாலை ரக்பியில் மிகவும் பழமையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான ரக்பி போட்டியாகக் கருதப்படுகிறது.
இந்தப் போட்டி கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.