மணிப்பூரில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது குக்கி மக்கள் கூட்டணி!!
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. குக்கி இனத்தவர்களுக்கும், மெய்தி பழங்குடியின மக்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பதற்றமாகவே இருந்து வருகிறது. மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியாக பிரேன் சிங் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூரில் ஆளும் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, குக்கி மக்கள் கூட்டணி கட்சி தலைவர் டோங்மங் ஹவோகிப் ஆளுநர் அனுசுயா உய்கேக்கு கடிதம் அனுப்பி உள்ளார். குக்கி மக்கள் கூட்டணிக்கு 2 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளதால், ஆதரவை வாபஸ் பெற்றாலும் மணிப்பூர் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிகிறது.