;
Athirady Tamil News

இன்னுமொரு போர்?… தைவானை தாக்க தயாராகும் சீனா: விளக்கும் ஆவணப்படம்!!

0

தீவு நாடான தைவானை தனக்கு சொந்தமானது எனக் கூறி வரும் சீனா தேவைப்பட்டால் ராணுவ ஆக்ரமிப்பு மூலம் அந்நாட்டை கைப்பற்ற போவதாக பலமுறை கூறியிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் “ஜாயின்ட் ஸ்வார்ட்” (Joint Sword) எனும் தைவானுக்கெதிரான ஒரு ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது. கடந்த மாதம், தைவானுக்கு அமெரிக்கா ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ராணுவ உதவியை வழங்கியது. ஆனால், இதற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்தது. இந்நிலையில் சீன ராணுவத்தின் 96-வது ஆண்டு விழாவை குறிக்கும் விதமாக சீனா ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் போருக்கு தயாரான நிலையில் ராணுவம் இருப்பதுபோல் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் சீன வீரர்கள் நாட்டிற்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக உறுதி எடுத்து கொள்கின்றனர்.

தைவான் நாட்டை எதிர்க்க சீனா ராணுவத்தில் உள்ள கிழக்கு பகுதி அமைப்பை சேர்ந்த ஒரு சீன ராணுவ விமானப்படை பைலட் உறுதிபட கூறியிருப்பது தெரிகிறது. அவர் தேவைப்பட்டால் தற்கொலை தாக்குதல் நடத்த தயார் என கூறுகிறார். தங்களின் உடலையும் உயிரையும் தியாகம் செய்ய தயார் என நீருக்கடியில் மூழ்கி ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் “ஃப்ராக் மேன்” படை வீரர் ஒருவர் கூறுகிறார்.

ஜாயின்ட் ஸ்வார்ட் பயிற்சி சம்பந்தமான காட்சிகளும், ராணுத்தின் பல அமைப்பின் வீரர்களின் கதைகளும், ராணுவ பயிற்சிகளும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது தைவான் நாட்டிற்கு சீனா விடும் எச்சரிக்கைபோல் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சேஸிங் ட்ரீம்ஸ் என இந்த ஆவணப்படத்திற்கு சீனா பெயரிட்டுள்ளது. தைவானை அச்சுறுத்தும் விதமாக தைவான் ஜலசந்தி பகுதியில் சீன ராணுவம் வான்வழி ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.