;
Athirady Tamil News

டுவிட்டரில் அந்த வார்த்தையை நீக்கிய ராகுல் காந்தி!!

0

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் டுவிட்டர் முகப்பு பகுதியில் மக்களவை உறுப்பினர் (Member of Parliament) என குறிப்பிட்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது மோடி குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக, மக்களவை செயலகம் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஆணை பிறப்பித்தது. இதனால் தனது டுவிட்டர் முகப்பில் பராளுமன்ற உறுப்பினர் என்பதை நீக்கிவிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி. எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ராகுல் காந்தியின் சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால் அவரது எம்.பி. பதவி தகுதி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சபாநாயகர் மற்றும் மக்களவை செயலகத்திடம் முறையிட்டனர். இதனால் இன்று காலை மக்களவை செயலகம், ராகுல் காந்தி மீதான தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றதை உறுதி செய்தது. இதனால் அவர் மக்களவையில் கலந்து கொண்டார். இந்த நிலையில் டுவிட்டர் பக்கத்தில் உள்ள முகப்பு பகுதியில் (Dis’Qualified MP) என்பதை மீண்டும் Member of Parliament என மாற்றியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.