உத்தரகாண்டில் அடுத்தடுத்து நான்கு முறை நிலஅதிர்வு!!
இந்தியாவின் வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை உத்தரகாண்டில் நான்கு முறை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. முதல் நிலஅதிர்வு நேற்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 1.37, 2.18, 6.52 என மூன்று முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
2, 3 மற்றும் 4-வது நில அதிர்வு 2.7 மற்றும் 2.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் பிதோராகார்ஹ் மாவட்டத்தை சுற்றி நிகழ்ந்துள்ளது. இந்தியா- சீனா எலலையில் மிலம் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நில அதிர்வை உணர்ந்ததாக, ராங்கோங்கில் உள்ள பூபால் சிங் தெரிவித்தார்.