பம்பலப்பிட்டியில் சூடு: 4 சுங்க அதிகாரிகள் கைது!!
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சுங்க அதிகாரிகள் நால்வர், வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வான் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்ற போது, வெள்ளவத்தையில் வான் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுங்க அதிகாரியின் துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய ஜீப், வெள்ளவத்தை பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், ஜீப்பில் இருந்தவர்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.