மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)
இலங்கை பொருளாதாரம் அடிபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது மத்திய வங்கி செயற்படமுயாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. மத்தியவங்கி கூறுவதனை வங்கி அமைப்புகள் செயற்படுத்தாத தன்மை காணப்படுகின்றது. வங்கி கட்டமைப்பு செயழிழந்து காணப்படுகின்றது. மக்கள் தமது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கண்டனங்களை எதிர்ப்பு பேரணிகள் மூலம் தெரியப்படுத்துகின்றனர். அரசியல்வாதிகள் தமக்கான உரிமையினை பெற்றுத்தருவார்கள் என்ற நிலையில் நாட்டு மக்கள் காணப்படவில்லை. தமது உரிமைகளை தாம் கேட்கும் நிலையில் மக்கள் செயற்படுகின்றனர். அன்றாட தமது தொழில்களை மேற்கொள்ள முடியாத அளவிற்கு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
இவ்வாறான தன்மையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காற்றாலை, இல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஒக்சைட் எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள் அகழ்வானது தொடர்சியாக நடைபெற்றுவருகின்றது. அத்துடன் காற்றாலை மின் உற்பத்தி செயற்றிட்டமும் சமாந்தரமாக செயற்படுத்தப்பட்டுவரும் நிலையில், மன்னார் பிரஜைகள் குழு பல்வேறுபட்ட மட்டத்தில் விழிப்புணர்வுகளை மேற்கொண்டும் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறல் நிலையில் தொடர்சியாக முன்னேற்றம் காணப்படாத நிலையில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொள்கின்றனர்.
காற்றாலைளுக்கு அனுமதி வழங்கியது யார்? என்ற கேள்வியுடன் மக்கள் தமது எதிர்பினைத் தெருவிக்கின்றமையும் முக்கியமானது. எவ்வித விலைமனுகோரலும் இன்றி பரிய அளவிலான காற்றாலைகள் சுமார் 300ற்கு மேற்பட்டவைகளை எவ்வாறு வழங்கியுள்ளார்கள் என்ற கேள்விகள் காணப்படுகின்றது. இந்திய நிறுவனம் இலங்கை தனியார் கம்பனிகள் இதில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தமது வருமானங்களை மக்களின் அக்கறையில் வழங்குவார்களா? இல்லை குறித்த மன்னார் மாவட்டத்தின் பூர்வீக தொழில்கள் ஆன கடல் மற்றும் விவசாயத்தினை அழிக்க பேகின்றார்கள் அதனுடாக நிலத்தடி நன்நீர் இருப்பில் மாற்றங்களை மேற்கொள்ளுதல் இதனுடாக மக்கள் தொடர்ச்சியாக நோய்களுக்குள் தள்ளும் செயற்பாட்டினையும் மேற்கொள்ள முடியும். ஒரு காற்றாலை நிறுவுவதற்கு குறைந்தது 6 ஏக்கர் நிலம் தேவையாகவுள்ளதுடன் பல நிலங்கள் தெடர்சியாக கைப்பற்றப்படும் நிலையும் சரணாலயங்கள் முதல் மக்கள் குடியிருப்புக்கள் வரை இவ் செயற்பாட்டிற்கான நிலங்கள் சட்டவிரோதமாக அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக இருப்பின் அனுமதி வழங்கியது யார்? அனுமதிக்கான ஆவனங்களை மாவட்ட செயலகம் மன்னார் வெளியிடவில்லை. ஏன்? அப்படியாயின் இவ் ஊழல் சுரண்டல்ளை மேற்கொள்வது யார்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எமுகின்றன.
காலைநிலை மாற்றம் என்ற சொல்லினை பயன்படுத்தி மக்களினை முட்டாளாக்கும் செயற்றிட்டங்களை நிறுத்துவதற்கும் நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்கப்படுவதையும் மக்கள் எதிர்பார்கள். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியான சந்தர்பத்தில் ஏதாவது ஒரு தனியார் நிறுவனம் எமக்கு வழங்கப்படுகின்ற வரி விலக்களிப்பினை வேண்டாம் நாடு வீழ்ந்துள்ளது இதற்காக பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளனவா? இல்லை அவர்களின் சுயநல கெடுவில் இருந்து அவர்கள் வெளிவரவில்லை தங்களது நாடு நாட்டுமக்கள் என சிந்திக்கவில்லை மாறாக அவர்களின் பணம் வரி விலக்களிப்பு என்ற பணக்கெடு என்ற தன்மையில் அவர்கள் இருக்கும் தன்மையில் அவர்களை நாட்டின் விரோதிகள் என்றுதான் பார்க்க வேண்டும் இலங்கை மத்திய வங்கி இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. நாடு தொடர்பாக அக்கறை இருந்தால் ஒரு ஆய்வினை செய்து பார்க்க வேண்டும் எவ்வளவு வருமானத்தினை நாம் சுயநல கெடுத்தன்மைக்கு பயன்படுதுகின்றோம் நாட்டிற்கு வழங்கவில்லை என்பதை தனியார் நிறுவனங்கள் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
போராட்டம் மக்களின் உரிமைகள் நிலங்கள் ஆரோக்கியம் எதிர்காலம் ஜீவனோபாயம் தடைப்படுகின்ற போது மக்கள் சுயமாக வீதிக்கு வருவார்கள் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான நீதியினை வழங்குவார்கள் என்று காத்திருப்பதில்லை. வாழ்வதற்காக பேராடுகின்றார்கள் சாதாரண மக்கள் மக்களிற்கு பெறுப்புகூறவேண்டியவர்கள் பெறுப்புக் கூறுதலை உறுதிப்படுத்தவில்லை. காலனித்துவ செயற்பாட்டினையே காற்றாலை மற்றும் ரைட்டானியம் இல்மனைட் தனியார் நிறுவனங்கள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்கின்றனர். இங்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சொத்துக்கள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எவ்விதமான ஆவணங்களும் இன்றி குத்தகைக்கு விடப்படுகின்றன. காற்றாலைளுக்கு பாரிய அளவிலான துழைகள் 100 அடிக்கு மேல் இடப்பட்டு பவுன்டேசன் நிறுவப்படுகின்றது 20 தொடக்கம் 30 வருடங்களுக்கான குத்தகையில் விடப்படும் இவ் பிரதேசத்தின் எதிர்காலம் என்ன? பெறப்படுகின்ற வருமானங்கள் எவ்வளவு அது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை? இதனால் மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
முதலாவது நாங்கள் வீதியில் இறங்கியமை எமது எதிர்பினை வெளிக்காட்டுவதற்கு நாடு வீழ்ந்து கிடக்கின்றது. இவ்வாறான காலப்பகுதியில் நாம் விலகி நிற்க முடியாது. இப்படியான சூழ்நிலையில் நாம் வீட்டிற்குள் இருக்க முடியுமா? முதலில் நாம் எமது எதிர்பினைத் தெருவிக்க வேண்டும்.
இவ் காற்றாலை மற்றும் ரைட்ரானியம் இல்மனைட் அகழ்வுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் பெறுப்பு கூறலினை வழங்கமுடியாவிட்டால் பதவிகளில் இருந்து விலகவேண்டும். நாங்கள் எங்களை நம்பவேண்டும் இதனுடாகவேதான் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். போராடவேண்டும். பாரிய அழுத்தங்கள் இருக்கலாம் இருப்பினும் அதனை இல்லாமல் செய்ய முடியும்.
தீவுக்கு பாரிய அனர்தங்களை விளைவிக்கும் நடவடிக்கைக்கு மன்னார் பிரஜைகள் குழு மற்றும் மக்கள் எதிர்தார்கள் இன்றும் தொடர்ச்சியா எதிர்கின்றனர். இந்தியாவிற்கும் ஏனைய தனியார் கம்பனிகளுக்கும் எவ்வளவு வழங்யுள்ளார்கள்? முழுதீவினையும் நிரப்பியுள்ளனர். இலாபங்கள் யாருக்கு? மன்னார் தீவிற்கா? நாட்டிற்கா? இல்லை. மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரையான கடலின் மூலம் பாரிய வருமானங்களை இழக்கும் தன்மையினை இவ் செயற்றிட்டங்கள் ஏற்படுத்துகின்றது. இது தொடர்பாக அரச உயர் அதிகாரிகளிடையே அக்கறையில்லை ஏன்? இது தான் பிரச்சனை
‘மன்னார் பிரச்னை தொடர்பாக அக்கறை கொள்வோம்’
மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)