திரும்பிப் பார்க்கும் போது எதுவும் மாறவில்லை: அநுர !!
“எந்த சக்தியைக் காட்டிலும் மக்கள் சக்தி வலியது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது” என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜா-எல வில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எமது நாட்டு மக்கள் பல தாசாப்தங்களாக மாற்றத்திற்காக அரசாங்கங்களை உருவாக்கியும், தூக்கி எறிந்தும் இருக்கின்றார்கள். வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது எதுவும் மாறவில்லை. எமது நாட்டிற்கு உண்மையான ஒரு மாற்றம் வேண்டும்.
அரசியல் கலாச்சாரம், பொருளாதார கொள்கைகள் மற்றும் நல்ல சமூக மாற்றம் போன்றவற்றில் சிறந்த மாற்றத்திற்கான தேவை எமது நாட்டுக்கு இருக்கின்றது.
பல தசாப்தங்களாக மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த உண்மையான மாற்றத்தை வழங்க தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
மக்களின் வளங்களைப் பாதுகாக்கும் ஒரு அரசியல் தேவை, மற்றும் அனைவருக்கும் பொதுவான நியாயமான சட்டம் தேவை” என அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.