கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 1990-ம் ஆண்டுகளில் நியூயார்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து தன்னை டிரம்ப் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறினார். இது தொடர்பான வழக்கில், கற்பழிப்பு குற்றச்சாட்டை நிராகரித்து கோர்ட்டு, ஜீன் கரோலை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக டிரம்ப் பொறுப்பேற்க வேண்டும் என்று கடந்த மே மாதம் அறிவித்தது.
மேலும் கரோலுக்கு டிரம்ப் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. ஆனால் அதை திட்டவட்டமாக டிரம்ப் மறுத்தார். மேலும் ஜீன் கரோல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் நடந்தது. இதில் டிரம்பின் அவதூறு வழக்கை நீதிபதி லூயிஸ் கப்லான் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். டிரம்ப் மீதான ஜீன் கரோலின் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கணிசமான உண்மை இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்தார்.