ஐ.என்.டி.ஐ.ஏ. என்ற பெயர் உங்களுக்கு கைகொடுக்காது.. பாராளுமன்ற விவாதத்தில் கிரண் ரிஜிஜு பேச்சு!!
மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாஜக அரசு மீதும் பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:- உலக அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது. எதிர்க்கட்சிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்தால் உங்கள் கூட்டணிக்கு ஐ.என்.டி.ஐ.ஏ. என்று பெயர் வைப்பது கைகொடுக்காது. நாட்டை ஆளும் அதிகாரத்தை அரசாங்கம் இழக்கும்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது என்பதை எதிர்க்கட்சிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். தவறான நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் வருத்தம் தெரிவிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.