காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்துவார்களா? !! (PHOTOS)
காற்றாலைளுக்கு அனுமதி வழங்கியது யார்? என்ற கேள்வியுடன் மக்கள் தமது எதிர்பினைத் தெருவிக்கின்றமையும் முக்கியமானது. எவ்வித விலைமனுகோரலும் இன்றி பரிய அளவிலான காற்றாலைகள் சுமார் 300ற்கு மேற்பட்டவைகளை எவ்வாறு வழங்கியுள்ளார்கள் என்ற கேள்விகள் காணப்படுகின்றது. இந்திய நிறுவனம் இலங்கை தனியார் கம்பனிகள் இதில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தமது வருமானங்களை மக்களின் அக்கறையில் வழங்குவார்களா? இல்லை குறித்த மன்னார் மாவட்டத்தின் பூர்வீக தொழில்கள் ஆன கடல் மற்றும் விவசாயத்தினை அழிக்க பேகின்றார்கள் அதனுடாக நிலத்தடி நன்நீர் இருப்பில் மாற்றங்களை மேற்கொள்ளுதல் இதனுடாக மக்கள் தொடர்ச்சியாக நோய்களுக்குள் தள்ளும் செயற்பாட்டினையும் மேற்கொள்ள முடியும். ஒரு காற்றாலை நிறுவுவதற்கு குறைந்தது 6 ஏக்கர் நிலம் தேவையாகவுள்ளதுடன் பல நிலங்கள் தெடர்சியாக கைப்பற்றப்படும் நிலையும் சரணாலயங்கள் முதல் மக்கள் குடியிருப்புக்கள் வரை இவ் செயற்பாட்டிற்கான நிலங்கள் சட்டவிரோதமாக அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளது. சட்டரீதியாக இருப்பின் அனுமதி வழங்கியது யார்? அனுமதிக்கான ஆவனங்களை மாவட்ட செயலகம் மன்னார் வெளியிடவில்லை. ஏன்? அப்படியாயின் இவ் ஊழல் சுரண்டல்ளை மேற்கொள்வது யார்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில்
2022.02.01 திகதியிடப்பட்டு அன்னை வேலாங்கன்னி மீனவர் கூட்டுறவுச்சங்கம் நறுவிலிக்குளம் அமைப்பினால் குறித்த காற்றாலை தனியார் கம்பனிக்கு கடிதம் மூலம் தமது வாழ்வாதாரங்களுக்கு பாதிக்காத வகையிலும் பாதிப்புக்கள் ஏற்படுமாயின் சட்டரீதியான நடவடிக்கையினை மேற்கொள்ளப்படும் என தெருவித்து வழங்கப்பட்ட கடிதத்திற்கு குறித்த தனியார் கம்பனி 2022.02.02 திகதியிட்டு பதில் கடிதத்தினை வழங்கியிருந்தது.
அதில் இலங்கை அரசினால் வழங்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட 15MW காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவினில் நறுவிலிக்குளம், உமநகரி, அச்சங்குளம் ஆகிய இடங்களில் சகல அரச திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகளின் உரிய அனுமதிகளுடன் அமைக்கப்படுகின்றது. இந்த மின்னுற்பத்தித்திட்டத்தை சுற்றுசூழல் அதிகாரசபையின் சிபாரிசுகளுக்கு அமைவாக சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதவகையிலும் கிராம மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணமும் நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். என குறித்த கடிதத்தின் ஊடாக மக்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
17.07.2023 திகதியிடப்பட்டு அன்னனை வேளங்கன்னி மீனவர் சுட்டுறவுச் சங்கத்தினால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு கடிதம் மூலம் நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்களின் அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளின் ஒலி அதிர்வலைகளினால் கிராமமக்கள் அசோகரியங்களை எதிர்நோக்குகின்றார்கள். மின்னுற்பத்திதிட்ட முகாமையாளரினால் வழங்கப்பட்ட உறுதிமொழி கடிதத்திற்கு எதிரான செயற்திட்டங்களை செய்துள்ளார்கள். இதற்கு பொறுப்பான அதிகாரிகள் தீர்வினைப் பெற்றுத்தரவில்லை என்பதனை குறிப்பிட்டு அரசாங்க அதிபர் அவர்கட்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெடர்சியாக 29.7.2023 நாட்டின் சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அவர்களுக்கும், தொடர்புபட்ட அமைச்சுக்கும், பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் தொடர்புபட்ட நிறுவனங்களுக்கு கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் எழுத்து மூலமான பொறுப்புக்கூறலினை குறித்த மக்கள் வேண்டி நிற்கின்றனர். முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே அரச உயர் அதிகாரிகள் முரண்பாடுகளை தோற்றுவிப்பதனை விடுத்து வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பாக விளக்கங்ளை வழங்குமாறு கோரிக்கையினை விடுக்கின்றனர்.
அனைவரும் பாதிக்காதவகையில் முதலீடுகளை நீதியான முறையில் வெளிப்படையாக வகையின் வெளிப்படுத்தப்படல் ஊடாக பிரச்சனைகள் ஏற்படுவதனைக் தவிர்க்கமுடியும். குறித்த தனியார் நிறுவனம் இலங்கை அரசினால் வழங்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட 15MW காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவினில் நறுவிலிக்குளம், உமநகரி. அச்சங்குளம் ஆகிய இடங்களில் சகல அரச திணைக்களங்கள் மற்றும் அதிகாரசபைகளின் உரிய அனுமதிகளுடன் அமைக்கப்படுகின்து. இந்த மின்னுற்பத்தித்திட்டத்தை சுற்றுசூழல் அதிகாரசபையின் சிபாரிசுகளுக்கு அமைவாக சூழலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதவகையிலும் கிராம மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணமும் நடைமுறைப்படுத்த கடமைப்பட்டுள்ளோம். என தமது கடிதத்தில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யார் மக்கள் செறிவாக வாழும் பிரதேசத்தில் மேற்கொள்ள அனுமதிவழங்கியது அதுதொடர்பான ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் தெருவிக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)
மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)