நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது- அமித்ஷா பேச்சு!!
ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை. மக்கள் அரசின் மீது அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளனர். அறதிப் பெரும்பான்மையுடன் பாஜக அரசு 2 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 50 வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அரசு எடுத்துள்ளது. இதே நாளில்தான் மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவங்கினார். மக்களின் அன்பை பெற்ற பிரதமராக மோடி உள்ளார். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் பிரதமர் மோடி ஓய்விவன்றி உழைக்கிறார். மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசுக்கு எதிராக முதன்முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானம்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மையான குணத்தை அம்பலத்படுத்தும். அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் காங்கிரஸின் உண்மையான நோக்கம். வெற்றி முழக்கங்களை முன்வைத்து ஏழைகளின் வாக்குகளை பெற்ற காங்கிரஸ். பிரதமர் மோடி ஏறத்தாழ 9 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளார். 2 டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்து கொரோனா வைரஸில் இருந்து 130 கோடி இந்தியர்களை மோடி அரசு காப்பாற்றியது. பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக பாடுபட்டு வருகிறார். 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை பிரதமர் நேரடியாக வழங்கியுள்ளார்.
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு பதிலாக அவர்கள் கடனே வாங்க வேண்டியதில்லை என்ற நிலையை கொண்டு வர எங்கள் அரசு செயல்படுகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நாம் கொடுப்பது இலவசம் அல்ல. விவசாயிகளிடம் காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. இலவச திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது எங்களின் நோக்கம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.