ரஷியா தாக்குதலில் 3 பேர் பலி: மாஸ்கோவில் நடைபெற்ற வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!
ரஷியா மற்றும் உக்ரைன் பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டால், பதிலடியாக அடுத்தநாள் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்துகிறது. ரஷியா தாக்குதல் நடத்தினால், உக்ரைன் பதிலடியாக டிரோன் தாக்குதலில் ஈடுபடுகிறது. இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு உக்ரைன் மாஸ்கோவை குறிவைத்து இரண்டு டிரோன் தாக்குதலை நடத்தியது.
ஆனால், ரஷியா அதை நடுவானில் தடுத்து அழித்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு பதிலடியாக ரஷியா ஜபோரிஷியா நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுஉலை இருக்கும் நகரம் இதுவாகும். அதேவேளையில் மாஸ்கோவில் உள்ள செர்கிவ் பொசாட் என்ற இடத்தில் ராணுவத்திற்கான பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடிவித்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 60 பேர் படுகாயம் அடைந்துள்ளது. இந்த வெடிவிபத்தால் 38 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமைடைந்துள்ளது. அருகில் உள்ளவர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொழிற்சாலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சில ரஷியா மீடியாக்கல் தெரிவிக்கின்றன. ஆனால், ரஷியா விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்த தகவல் தெரிவிக்கவில்லை.