மசாலா பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-ல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்- எஸ். சௌந்தரராஜன் வலியுறுத்தல்!!
அகில இந்திய வியாபாரிகள் சங்க மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் எஸ். சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிட வேண்டும். அனைத்து பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி-யை குறைக்க வேண்டும். புதிய இரும்புக்கும் பழைய இரும்புக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி என்பது ஏற்புடையது அல்ல. பழைய இரும்புக்கு ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும்.
பெண்கள் சமையலறையில் பயன்படுத்தும் மசாலா பொருட்களுக்கு ஜி.எஸ்.டி -ல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் பொருளாளர் நியூ ராயல் எஸ். முஹம்மது, தமிழ்நாடு அழகு நகை வியாபாரிகள் சங்க தலைவர் தேஜானந்த், மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி, மாநில இணை செயலாளர் ஆரணி கல்யாணராம் மற்றும் நூற்றுக்கணக்கான வணிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டார்கள்.