காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட்!!
அவையில் பொய்யான தகவல்களை அதிர் ரஞ்சன் சவுத்திரி கூறினார் என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மத்திய அமைச்சர்களின் பேச்சிற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஜோஷி குற்றம் சாட்டினார். இதனால், அதிர் ரஞ்சன் மீதான குற்றச்சாட்டை உரிமை குழுவுக்கு அனுப்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், “உரிமை குழு அதன் மீது முடிவெடுக்கும் வரை அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்” என்றும் கோரப்பட்டது. இந்நிலையில், ஜோஷி குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரியை சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டார்.