;
Athirady Tamil News

ராஜாஜி, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து பேசுகிறார்கள்- பிரதமர் மோடி!!

0

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். பிரதமர் மோடி பேசியதாவது:- நாட்டில் ஏழ்மை மிக வேகமாக அகன்று கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டகளில் 13.5 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளனர். இந்தியா ஏழ்மையை ஒழித்து இருப்பதாக சர்வதேச நிதியமும் பாராட்டியுள்ளது. கர்வமும், நம்பிக்கையின்மையும் எதிர்க்கட்சிகளின் ரத்தத்தில் கலந்துள்ளது. எதிர்க்கட்சியினர் பழமையான சிந்தனை உடையவர்கள். இந்தியாவில் நல்லவைகள் நடப்பதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மக்கள் நம்பிக்கையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. தூய்மை இந்தியா திட்டம் 3 லட்சம் உயிர்களை காப்பாற்றி உள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் எனக்கு வலிமையை தருகிறது. நாடு முடங்கிவிடும், நாட்டின் வங்கி அமைப்புகள் முடிந்துவிடும் என எதிர்க்கட்சிகள் கூறி வந்தனர்.

ஆனால் நமது பொதுத்துறை நிறுவனங்களின் லாபம் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை பொய்யாக்கி நாட்டின் வளர்ச்சி உயர்ந்து வருகிறது. உலக அரங்கில் சிலர் நமது தோற்றத்தை களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். உலகிற்கு உண்மை தெரியும் எனவே அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. பாதுகாப்புத்துறை ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்யும் எச்ஐஎல் நிறுவனம் முடிந்துவிட்டது என்றெல்லாம் பேசினார்கள். குற்றச்சாட்டுகளை உடைத்து எசஐஎல் நிறுவனம் தேசத்தின் முக்கிய சின்னமாக உருவெடுத்துள்ளது.

அழிந்துபோகும் என எதிர்க்கட்சிகள் கூறிய நிறுவனங்கள், வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் நாட்டின் திறமை, உழைப்பு, துணிவின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். நாட்டின் ஜனநாயகத்தையும், நாட்டையும் கூட எதிர்க்கட்சிகள் அவமதித்தனர். நம் மேலும் மேலும் வலிமை அடைவோம் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவது எப்படி என கூட அவர்களுக்கு கற்றுத்தர வேண்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு என்னை தாக்குகிறார்களோ அந்த அளவுக்கு நான் மேலும் மேலும் வெற்றி பெறுவேன். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டை சீரழித்துவிட்டனர். காங்கிரஸ் ஆட்சியில் நாட்டை பாழாக்கிவிட்டனர். இப்போது இந்தியா முதல் 5 நாடுகளில் ஒன்றாக மாறி உள்ளது. 3 விஷயங்களில் கவனம் செலுத்தி, கடுமையாக நான் உழைத்தேன்.

இதனால் நாடு வளர்ச்சி கண்டுள்ளது. 2028ம் ஆண்டில் நீங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானதம் கொண்டுவரும்போது நாடு பொருளாதார வளர்ச்சியில் 3ம் இடத்தில் இருக்கும். தூய்மை இந்தியா திட்டத்தை அறிவிக்கும்போது, எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். ஸ்டார்ட் அப் இந்தியா பற்றி பேசும்போது, அது நடக்கவே நடக்காது என்று அவர்கள் கூறினார்கள். டிஜிட்டல் இந்தியா பற்றி பேசியபோது, அவர்கள் விமர்சனம் செய்தனர். இந்தியாவின் திறமை மீது அவர்களுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்தது இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு பாகிஸ்தான் மீது பேரன்பு உள்ளதால் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்பார்கள்.

காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை பிரிவினை வாதிகள் மீது இருந்ததே தவிர எளிய மக்களவை அவர்கள் நம்பவில்லை. பயங்கரவாத அச்சுறுத்தலின்போது இந்திய நாட்டின் படைகள் மீது எதிர்க்கட்சியினருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. இந்தியாவை யாரெல்லாம் கிண்டல் செய்கிறார்களோ அவர்களையே எதிர்க்கட்சிகள் நம்பினர். காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு கள நிலவரம் என்னவென்று புரியவில்லை. தமிழ்நாட்டில் 1962ம் ஆண்டு கடைசியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேற்குவங்கத்தில் கடைசியாக 1972ம் ஆண்டில் காங்கிரஸ் வென்றது.

உ.பி., பீகாரில் 1982களில் காங்கிரஸ் கடைசியாக வெற்றி பெற்றது. பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மீது நீண்ட காலத்திற்கு முன்பே மக்கள் நம்பிக்கைய இழந்துவிட்டனர். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றனர். ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உங்கள் கூட்டணிக்கு இறுதி காரியங்களை செய்துவிட்டீர்கள்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சியினர் யாரை பின் தொடர்கிறார்களோ, அவர்களை இளைஞர்கள் நம்பவில்லை. பழைய கூட்டணிக்கு பெயிண்ட் அடித்து புதிய பெயர் வைத்துவீட்டீர்கள். மக்களின் எண்ணங்களை உங்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. யுத்தத்திற்கு பயந்தவர்கள், ரணதீரன் என பெயரிட்டு கொள்வார்கள். உங்களின் சீரழிவை நீங்களே கொண்டாடி இருக்கிறீர்கள். மாடு மேய்த்துக் கொண்டு நிலவிற்கு செல்ல ஆசைப்படுவது போலதான் எதிர்க்கட்சியினரின் கூட்டணி பெயர் மாற்றம்.

எதிர்க்கட்சிகளுக்கு இந்திய சலாச்சாரத்தின் மீது எந்த விதமான புரிதலும் இல்லை. இந்தியா எனும் பெயரை பயன்படுத்துவது மூலம் மக்களிடம் தங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். திமுக அமைச்சர் ஒருவர் தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என பேசியுள்ளார். ராஜாஜி, அப்துல்கலாம் பிறந்த தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து பேசுகிறார்கள். தான் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக NDA-வில் இரண்டு I-யை எதிர்க்கட்சிகள் சேர்த்துள்ளனர். பெயர், கொள்கை என எதுவும் அவர்களுடையது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.