கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது யார் ..! மோடி கடும் விமர்சனம் !!
கச்சதீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திரா காந்தி அரசுதான் வழங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று (10) கூறினார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
கச்சதீவானது இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையில் அமைந்துள்ள ஒரு தீவாகும்.
பாரம்பரியமாக இலங்கை மற்றும் இந்திய கடற்தொழிலாளர்களால் இந்த தீவு பயன்படுத்தப்பட்டு வருவதும் வழக்கம்.
1974இல் மேற்கொள்ளப்பட்ட “இந்தோ – இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்” கீழ் கச்சதீவை இலங்கைப் பிரதேசமாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார்.
கச்சதீவை இந்தியாவுக்கு கொண்டு வர வலியுறுத்தி தமிழக தி.மு.க அரசு தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாக கூறிய இந்திய பிரதமர் அதனை சாத்தியப்பாடற்றதாக மாற்றியது காங்கிரஸ் அரசு தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
“கச்சதீவு தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள ஒரு தீவு, யார் அதை வேறு நாட்டுக்கு கொடுத்தார்கள்?, இந்திரா காந்தியின் தலைமையில் தானே நடந்தது,” என்றார்.