சூப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் ஈரான் – அச்சுறுத்தலில் அமெரிக்கா !!
பாதுகாப்பு சக்தியில் ஒரு புதிய அத்தியாயமாகவும், முக்கியமாக ராணுவ ரீதியாக புதிய பலத்தை வழங்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை ஈரான் தன்வசப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஈரான் நாட்டின் கையில் முக்கிய தொழில்நுட்பம் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி சூப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் தொழில்நுட்பத்தை ஈரான் பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில், அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடக நிறுவனங்கள் சூப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் தொழில்நுட்பம் சோதனையில் உள்ளதாகவும், விரைவில் சோதனை வெற்றி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், வளைகுடாவில் அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளமையானது அமெரிக்காவிற்கு ஒருபுறம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமையும் எனலாம்.
இந்நிலையில், கடந்த வாரம் 600 கிமீ தூர ஏவுகணைகளை ஈரான் சோதனை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.