பிரித்தானியாவின் பிரபல சுற்றுலாத்தளத்தில் நடந்த சம்பவம் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்!!
பிரித்தானியாவின் டோர்செட் வெஸ்ட் பே கடற்கரையில் உள்ள பாறை முகட்டின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
மேலும், இந்த திடீர் மண் மற்றும் பாறை சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக சுற்றுலாப் பயணிகள் உயிர் தப்பி ஓடியுள்ளனர்.
இதற்கிடையில் இந்த நிலச்சரிவின் போது பாறைகள் மற்றும் மண் தொகுப்புகள் கடலில் விழும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து டோர்செட் கவுன்சில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பாறை சரிவு மற்றும் நிலச்சரிவுகள் எப்போது வேண்டும் என்றாலும் நடக்கலாம். அங்கிருந்த மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தென் மேற்கு கடற்கரையின் மலை உச்சிக்கு செல்வதற்கான வழி தற்போது அடைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.