ஸ்ரீநகரில் MiG-29 போர் விமானங்கள் குவிப்பு!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில், இந்தியா MiG-29 போர் விமானப்படையை நிலைநிறுத்தியுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்குமுன் MiG-21 விமானப்படை நிலைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட MiG-29 போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ”காஷ்மீர் பள்ளத்தாக்கின் மையப்பகுதி ஸ்ரீநகர். தரைமட்டத்தில் இருந்து மிகவும் உயர்வான பகுதியில் உள்ளது. எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால் அதிக எடை மற்றும் உந்துதல் விகிதம், எதிரிகளின் ஊடுருவலுக்கு குறைந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது போன்றவைக்கு மூலோபாய ரீதியாக சிறந்தது.
MiG-29 விமானப்படை இவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் என படைப்பிரிவு தலைவர் விபுல் சர்மா தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு பாலகோட்டில் பாகிஸ்தானின் F-16 விமானத்தை தாக்கியழித்த MiG-21s விமானத்தைவிட MiG-29 பல நன்மைகள் ஊள்ளது. வானில் நிண்ட தூரம் சென்று தாக்குதல், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்குதல் வல்லமை கொண்டது. சண்டையின்போது எதிர் விமானங்களின் செயல்பாட்டை செயலழிக்க வைக்கும் தன்மை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2020 கல்வான் தாக்குதலுக்குப் பிறகு லடாக் பகுதியில் MiG-29s விமானப்படை நிலைநிறுத்தப்பட்டது.