நேபாளத்தில் இருந்து தக்காளி கொள்முதல்- உ.பி.யில் கிலோ ரூ.70-க்கு விற்க முடிவு!!
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்வை தொடர்ந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் செய்து, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், நேபாளத்தில் இருந்து 10 டன் தக்காளியை தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் செய்துள்ளது.
அந்த தக்காளி, இன்றும், நாளையும் உத்தரபிரதேசத்தில் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. வெளிநாட்டில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.