சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை!
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை நடாத்தும் முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்தார்.
இந்த மீளாய்வின் பின்னர் இரண்டாவது கடன் தவணையை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.