;
Athirady Tamil News

அரியானா கலவரம்- ஒரே டுவீட்.. பரபரப்பாக கைது செய்யப்பட்ட தலைமை செய்தி ஆசிரியர்..!

0

இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ளது நூ (Nuh) மாவட்டம். இங்கு கடந்த ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் வேறொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு மோதல் உருவானது. இதில் வன்முறை வெடித்து இம்மோதல் பெரும் கலவரமாக மாறியது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்கவும், அமைதி திரும்பவும் மாநில அரசாங்கமும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பணியாற்றி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கலவரம் குறித்து இரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் மீது பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். நாளை () வரை அந்த மாவட்டத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. கலவரம் குறித்து பல பிரமுகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரயராக பணிபுரிபவர் முகேஷ் குமார்.

இவர் இக்கலவரம் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். முகேஷ் குமார் எக்ஸில் (டுவிட்டர்) ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: “கத்தார் நாட்டை தலைமை இடமாக கொண்ட அல் ஜசீரா (Al Jazeera) செய்தி நிறுவனம், குருகிராம் காவல்துறை ஆணையர் கலா ராமச்சந்திரன்-ஐ தொடர்பு கொண்டு இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நிர்பந்திக்கிறது. இந்த அழுத்தத்தால் ஆணையர் இந்து மத ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் எங்கிருந்தாலும் அவர்களை கைது செய்கிறார்.” இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். இதை குருகிராம் காவல்துறை மறுத்தது. இதனை தொடர்ந்து முகேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கைக்கு சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.., “இந்த கைது சட்ட விரோதமானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். நாங்கள் அவருக்கு துணையாய் இருப்போம்” என தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் சுரேஷ் சவ்ஹன்கே (Suresh Chavhanke) இது குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்தார். முகேஷ் விடுவிக்கப்பட்டதாக சுரேஷ் பின்னர் தெரிவித்திருந்தாலும் காவல்துறையினர் அதிகாரபூர்வமாக இதனை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.