;
Athirady Tamil News

மியான்மரில் கனமழைக்கு 5 பேர் பலி: 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

0

மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது வழக்கமானதுதான். இருந்தாலும், தற்போதைய அதிதீவிர வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கை காரணமாக பலர் வெளியேறிய நிலையில், வெள்ளத்தில் அளவு அதிகரிக்க மீட்புப்படையினர் வீட்டில் இருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.

இரண்டு மாடி கொண்டு கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர். கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் பகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.