நீர்அளவு செய்யும் இடத்தை காரைக்கால் நுழைவு பகுதிக்கு மாற்ற வேண்டும்!!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில், புதுவை அரசு சார்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு புதுவை அரசின் பல்வேறு கோரிக்கை ளை ஆணையத்தின் முன் வைத்தார். இதுகுறித்து பொதுப் பணித்துறை செயலர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜூன், ஜூலைக்கான ஒதுக்கப்பட்ட காவிரி நீர் 0.250 டி.எம்.சி-க்கு பதிலாக ஒட்டு மொத்தமாக 0.0808 டி.எம்.சியாக மட்டுமே இருந்தது. பற்றாக்குறை 0.1810 டி.எம்.சியாக இருக்கிறது. காரைக்கால் மாவட்டத்திற்கு ஆகஸ்ட்டூ மாதத்தில் நீர்வரத்து 0.0808 டி.எம்.சியாகவும், நடப்பு நீர் ஆண்டில் 0,2618 டி.எம்.சியாகவும் இருந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரி நீர் தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. காரைக்கால் பகுதிக்கு கடந்த 3 நாட்களாக நீர் இருப்பு நிலை பூஜ்ஜிய மாக இருக்கிறது.
காரைக்கால் பகுதியில் நீர் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீர் திறக்க மாநிலங்களுக்கு உத்தரவிட புதுவை உறுப்பினர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார். புதுவையில் நெல் சாகுபடியின் முக்கிய ஆதாரமாக உள்ளது. காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு குறுவை பயிர் பருவத்திற்கு தண்ணீர் இல்லாமல் போகும். விகிதச்சார்பு பகிர்வுக்கான சூத்திரத்தை ஆணையம் புதுவை யூனி யன் பிரதேசத்துக்கு உரிய பங்களிப் புடன் உருவாக்க வேண்டும். காரைக்கால் பிராந்தியத்தின் 7 டி.எம்.சி. காவிரி நீரைப் பெறு வதற்கான சரியான, உண்மையான மதிப்பீடு உறுதி செய்யப்பட வேண்டும். எனவே மத்திய பொதுப் பணித்துறை நீர் அளவு செய்யும் இடத்தை காரைக்கால் மண்டலத்தின் நுழைவுப்பகுதியில் மாற்ற வேண்டும்.
பேரளம் மற்றும் தென்குடி ஆகியவை முறையே கண்ணாப்பூர் மற்றும் மேலப்பொலகத்தில் புதிய இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். ஆகஸ்ட் 3-வது வாரத்தில் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறி யாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு, மத்திய நீர் ஆணையம் ஆய்வு செய்ய பரிந்து ரைத்துள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பை அளித்து, இடமாற்றம் செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்த கேட்டுக்கொண்டுள்ளது, புதுவை அரசு காரைக்கால் பகுதிக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி போதிய அளவு தண்ணீர் வழங்கக்கோரி கேட்டுக் கொ ள் ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.