கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரா நீங்கள் – அப்படியென்றால் சற்று எச்சரிக்கையாக இருங்கள் !!
உலகளவில் கொரோனா தொற்றின் காரணமாக பல மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தற்போது நாம் கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீளெழுந்துவிட்டதாக நினைத்தாலும், உலக சுகாதார அமைப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்காலத்தில் சில நோய் நிலைமைகளுக்கு உள்ளாகலாம் என தெரிவித்திருந்தது.
இதற்கமைவாக, கொரோனாவின் நீண்டகால நோய் பாதிப்பை சந்திப்போருக்கு மூட்டு சம்பந்தமான பிரச்சனை ஏற்படுவது உறுதியாகியுள்ளது.
இவ்வகை வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர்கள் 10 நிமிடம் நின்றுகொண்டு இருந்தால், அவர்களின் மூட்டுப்பகுதியில் நீல நிறமாக மாறுகிறது என அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளன.
உலகளவில் இந்த பிரச்சனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஐரோப்பிய நாட்டை சேர்ந்த 33 வயது நபர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு குணமடைந்து இருக்கிறார்.
இவருக்கு தற்போது 10 நிமிடம் நின்றாலே மூட்டு பகுதியில் கடுமையான வலி, மூட்டின் நிறம் மாறுதல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டு இருக்கின்றன.
இதற்கு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு நீண்டகால கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது.