1 பில். டொலர்களை தாண்டியது வருமானம் !!
2023ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்ற அதேவேளை, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 51,594 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓகஸ்ட் மாதத்திலும் 9,146 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இதேவேளை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 6,939 பேரும், சீனாவிலிருந்து 3,707 பேரும், பிரான்சிலிருந்து 3,249 பேரும், ஜேர்மனியிலிருந்து 3,155 பேரும், ரஷ்யாவிலிருந்து 2,385 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் மொத்தம் 143,039 சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 819,507 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கிறது.