இரண்டு வாரங்களுக்குப் பிறகு நூ மாவட்டத்தில் இணைய சேவை!!
இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் மற்றொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மோதல் உருவானது. இந்த மோதல் வன்முறையாக வெடித்து, பெரும் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தில் இரண்டு ஊர்க்காவல்படை வீரர்கள், மசூதி மதகுரு உள்ளிட்ட ஆறுபேர் கொலை செய்யப்பட்டனர். வாகனங்கள், கடைகள் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலை நிலவியதால் அரசு இணைய தள சேவையை முடக்கியது. சுமார் இரண்டு வார காலத்திற்குப்பிறகு தற்போது மீண்டும் இணைய தள சேவை அரியானாவின் நூ மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. விஷ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியில் பசு காவலர் மோனு மனேசர் கலந்து கொள்ள இருப்பதாக வதந்தி பரவியது. மோனு மனேசர், நூவில் நடைபெற இருக்கும் பேரணியில் ஆதரவாளர்கள் மிகப்பெரிய அளவில் திரள வேண்டும் என சமூக வலைத்தள வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம். நீங்கள் கலந்து கொண்டால் தேவையற்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்கள்.
இந்த வன்முறையில் மானேசர் பங்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற இருக்கிறது. நூ மாவட்டத்தை நீக்க வேண்டும், இறைச்சிக்காக பசுக்கள் கொலை செய்யப்படாத மாவட்டமாக வேண்டும் என 51 பேர் கொண்ட கிராமசபை கூட்டம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே நூ மாவட்டத்தில் ஆகஸ்டு 28-ந்தேதி ஜலாஹிஷேக் யாத்திரை மீண்டும் தொடங்கும் என முடிவு செய்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எதிராக கடும் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இந்த வன்முறை காரணமாக 390-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 118 பேர் வன்முறை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளம் மூலமாக வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார் கடந்த வாரம் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் முழு அளவில் இயக்கப்பட்டு வருகிறது.