மில்லியன் ரூபா தள்ளுபடி! – மக்கள் மீது வரிச் சுமைகள்!!
மில்லியன் ரூபா தள்ளுபடி, மக்கள் மீது வரிச் சுமைகள்! சென்ற கிழமை நடந்த COOP குழுவில் சாணக்கியன்.
மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன்,
மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில், மாகா உட்பட 15 நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 793 மில்லியன் ரூபாவை தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மற்றும் அதில் மாகா நிறுவனம் செலுத்த வேண்டிய 482 மில்லியனை குறைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கோப் குழுவில் நடந்த கூட்டத்தின் போது இதன் விடயம் வெளிப்படுத்தப்பட்டது அதன் போது நானும் அக் கூட்டத்தில் இருந்தேன்.
நாடானது பாரிய கடன் சுமைகளுக்கு மத்தியில் இருக்கின்றது அத்துடன் மக்கள் போதிய வருமானம் இன்றி வரிச் சுமையுடன் அன்றாட செலவுகளுக்கே அல்லல்படும் இதே வேளை இவ்வாறான பண விலக்களிப்புக்கள் ஆனது மேலும் மேலும் மக்களையே கடன் சுமைக்குள் தள்ளும் நடவடிக்கையாக உள்ளது அக் கூட்டத்தில் இதற்கான எதிர்ப்பினை வெளிப் படுந்திருந்தேன்.
இவ்வாறான பண விலக்களிப்புக்கள் நமது நாட்டுக்கு உள்ளூர் உற்பத்திகளை மேற்கொள்ளும் மேலும் அவற்றை இவ் இக்கட்டான காலகட்டத்திலும் நஷ்டமாக இருப்பினும் கைவிடாது தொடர்ந்து நடாத்திவருபவர்களுக்கு வழங்கப்படினும் கூட எமது நாட்டின் உள்ளூர் உற்பத்திகள் எதிர்காலத்தில் பாதிக்கப்படாது மற்றும் நிறுத்தப்படாது தடுக்கலாம். என தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.