;
Athirady Tamil News

இன்ஸ்டாகிராமால் நிகழ்ந்த விபரீதம்: பொறாமையால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!!

0

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சிறு சிறு பிரச்சினைகளுக்காக பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளத்தில் அதிக பாலோவர்களை பெற்றதால் ஒரு பெண் அவளது கணவராலே கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் பாரா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராகுல் மிஸ்ரா(வயது37). இவர் டூர் மற்றும் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ராகுலின் மனைவிக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் அதிக ஈடுபாடு இருந்தது. குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி பதிவுகள் போட்டு வந்தார். அவரது பதிவுகளுக்கு அதிக லைக்குகள் வந்தன. மேலும் அவருக்கு பாலோவர்கள் அதிகமானோர் உருவானார்கள். இதனால் அவர் அதிகநேரம் இன்ஸ்டாகிராமில் செலவழித்தார். இது ராகுலுக்கு தெரியவந்தது. அவரும் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தார். தன்னைவிட அதிக பாலோவர்கள் மனைவிக்கு இருக்கிறார்களே என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குள் ஏற்பட்டது. மேலும் பாலோவர்களில் சிலர் மனைவியை சந்திப்பதாகவும் சந்தேகப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று ராகுல் தனது மனைவி, குழந்தைகளுடன் ரேபரேலிக்கு இனோவா காரில் சென்றார். பூர்வாஞ்சல் சாலையில் முஜ்ஏஸ் சதுக்கம் அருகே வந்தபோது காரை ஓரமாக நிறுத்தினார். பின்னர் ஆவேசமாக தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்பு குழந்தைகளுடன் காரில் அமர்ந்திருந்தார். அப்போது அந்தவழியாக சென்ற போலீஸ் ரோந்து குழுவினர் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது ராகுலின் குழந்தைகள் தாயை கொலை செய்ததை கூறினார்கள். இதையடுத்து போலீசார் ராகுலை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் “மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் அதிகரித்ததால் ஏற்பட்ட பொறாமையிலும், பாலோவர்கள் சிலரை ரகசியமாக சந்தித்ததாலும் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து ராகுல் மனைவியின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி வைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.