காய்கறி வியாபாரியுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காய்கறி வியாபாரி ராமேஷ்வர் என்பவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது பணவீக்கத்தால் தனது கஷ்டங்களை ராகுல் காந்தியிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராமேஷ்வருடனான தனது படத்தைப் பகிர்ந்துகொண்ட ராகுல் காந்தி, “ராமேஸ்வர் ஒரு கலகலப்பான மனிதர்! கோடிக்கணக்கான இந்தியர்களின் அன்பான இயல்பின் காட்சியை அவரில் காணலாம்” என்று இந்தியில் டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
மேலும், “பாதகமான சூழ்நிலைகளிலும் புன்னகையுடன் முன்னேறுபவர்கள் உண்மையிலேயே ‘பாரத் பாக்ய விதாதா (இந்தியாவின் விதியை உருவாக்குபவர்கள்)” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். அந்த வீடியோவில், இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ராகுல் காந்தியும் ராமேஸ்வரும் ஒளிரும் தருணங்களைப் பகிர்ந்து கொள்வதை காண முடிந்தது.
வைரலான வீடியோவில், ரமேஷ்வர் தனது காலி கை வண்டியுடன் காணப்பட்டார், தக்காளி விலை மிக அதிகமாக இருப்பதால் வாங்க முடியவில்லை என்று அவர் கூறினார். மேலும், ராகுல் காந்தி வேறு ஏதாவது காய்கறி வாங்குவீர்களா என்று கேட்டதற்கு, “காசு இல்லை” என்று வியாபாரி மனமுடைந்து பேசியுள்ளார். விலைவாசி உயர்வு குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.