நண்டுகளை ஒழிக்க 26 கோடிகள் செலவழிக்கும் நாடு – ஏன் தெரியுமா?
நண்டுகளை ஒழிக்க ஒரு நாடு 26 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஆம், இத்தாலியில்தான் இவ்வாறானதொரு விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இத்தாலியில் நீல நண்டுகள் அதிவேகமாக அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் ஆகும்.
ஆரம்ப காலத்தில் இத்தாலியர்கள் ஒன்று அல்லது இரண்டு நீல நண்டுகளை மட்டுமே பார்க்க கூடியதாக இருந்த நிலைப்பாடு தற்போது மாறி, இவை படிப்படியாக அதிகரித்து நத்தைகளும் மற்ற கடல்வாழ் உயிரினங்களும் மறைந்துவிட்டதாக தெரவித்துள்ளனர்.
அத்துடன், மட்டி, மீன் ரோகு போன்ற நீர்வாழ் உயிரினங்களும் இறந்து கொண்டிருப்பதாக இத்தாலிய மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இத்தாலியர்கள் நத்தைகளை அதிகமாக விரும்புவதோடு, அங்கு நீல நண்டுகள் சில கடல் அல்லாத தாவரங்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை உண்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்த நீல நண்டுகள் அப்பகுதியில் உள்ள நத்தைகளில் 90% வரை உண்கின்றன என்று கடல் உயிரியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால்தான் நீல நண்டுகள் பெருகுவதை நிறுத்த இத்தாலி அரசு முடிவு செய்துள்ளது.