படையினருக்கு கோழி இறைச்சி இறக்குமதி!!
படையினருக்கு தேவையான கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறைச்சி பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நிறுவனமும் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவர்களின் தயாரிப்புகளுக்கு தேவையான இறைச்சியை (பச்சையான) இறக்குமதி செய்ய அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது அனுமதிக்கப்பட்டால், இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து அதன் பயனை வாடிக்கையாளருக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எவ்வாறாயினும், எந்தவொரு நிறுவனமும் இதுவரை இறைச்சியை இறக்குமதி செய்ய கோரிக்கை விடுக்கவில்லை என்று அதிகாரி மேலும் கூறினார்.