ரஷ்ய எல்லைக்குள் நுழைய முயன்ற நேட்டோ உறுப்பு நாட்டு விமானம்!
ரஷ்ய எல்லைக்குள் வந்த நோர்வே நாட்டு ராணுவ ரோந்து விமானம் ஒன்றை விரட்டியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
குறித்த விமானம் பாரன்ட்ஸ் கடல் மீது பறந்து ரஷ்ய எல்லையில் நுழைய முயன்றதாகவும் அதனை ரஷ்ய விமானப்படையின் மிக் 29 போர் விமானம் மூலம் விரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவின் போர் விமானம் எதிர்கொண்டதையடுத்து நோர்வே விமானம் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் விமானம் போசெய்டன் ரோந்து விமானம் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நேட்டோ உறுப்பு நாட்டுக்கும் ரஷ்யாவுக்குமான ராணுவ ரீதியான மோதல் ஏற்பட்டால் அது மிகப்பெரிய யுத்தத்திற்கான தொடக்கமாக இருக்கும் என கூறப்படுகின்றது.