;
Athirady Tamil News

விலை மதிப்பற்ற உயிர்ப்பலிக்கு இவைகள்தான் முக்கிய காரணம்: மணிப்பூர் முதல்வர்!!

0

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூர செயல் அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. இதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனம் கிளம்பியது. தற்போது மணிப்பூரில் அமைதி திரும்பிய வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் மூன்று முக்கிய விசயங்கள்தான் மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்ப்பலிக்கு முக்கிய காரணம் என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். 77-வது சுதந்திர தினவிழாவையொட்டி தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரேன் சிங் பேசியதாவது:- ‘குறிப்பிட்ட தவறான புரிதல்கள், சுயநலனுக்கான செயல்கள், நாட்டை சீர்குலைப்பதற்கான வெளிநாட்டு சதி ஆகியவை மணிப்பூரில் விலைமதிப்பற்ற உயிர்களை காவு வாங்கியுள்ளது.

ஏராளமானோர் நிவாரண முகாமலில் வசிக்க காரணமாகிவிட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுடைய இடத்திற்கு திரும்பவும், மணிப்பூரில் அமைதி ஏற்படவும் அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. சொந்த வீட்டிற்கு உடனடியாக செல்ல முடியாதவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டிற்கு மாற்றப்படுவார்கள்.

தவறு செய்வது மனித இயல்வு. அதை நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வழங்கியுள்ளதற்கு எதிராக அரசு எதையும் செய்யவில்லை. யாரும் அவ்வாறு செய்ய முடியாது. ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டத்தை வழங்கவும், மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.