ஹிண்டன்பர்க் புகார் குறித்து விசாரணை தேவை: அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயராக இருந்த டெலாய்ட் நிறுவனம் வலியுறுத்தல்..!!!
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயராக இருந்த டெலாய்ட் நிறுவனம், ஹிண்டன்பர்க் புகார்கள் குறித்து விசாரிக்க வலியுறுத்தியுள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ கணக்காயர் பொறுப்பிலிருந்து டெலாய்ட் நிறுவனம் அண்மையில் விலகியது. பொறுப்பிலிருந்து விலகுமுன், அதானி குழும நிறுவனங்கள் குறித்து ஹிண்டன்பர்க் கூறிய, புகார்களை விசாரிக்க டெலாய்ட் வலியுறுத்தியுள்ளது.
அதானி குழுமத்தின் நிதிநிலை அறிக்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஹிண்டன்பர்க் புகார்கள் உள்ளானவை என்று விசாரிக்கக் கோரியுள்ளது. எனினும், அதானி நிறுவனத்தின் நிதிநிலையை பாதிக்கும் வகையில் எந்தப் புகாரையும் ஹிண்டன்பர்க் கூறவில்லை என்று அதானி மறுத்துள்ளது. சுதந்திரமான வெளி கணக்காய்வு நிறுவனம் மூலம் ஹிண்டன்பர்க் புகார்கள் பற்றி விசாரிக்க டெலாய்ட் நிறுவனம் கோரியுள்ளது. செபியின் விசாரணை நடைபெற்று வருவதால் வெளி கணக்காய்வு நிறுவனம் மூலம் விசாரிக்கத் தேவையில்லை என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.