647,683 பேருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!!
சிறுநீரக பாதிப்புடையவர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியவர்கள் என 647,683 பேருக்கு, புதிய திட்டம் வரும்வரையில் கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
517,962 வயோதிபர்கள், 88,602 விசேட தேவையுடையோர் மற்றும் 41,119 சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் இதில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களும் உள்ளடங்குவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வயோதிபர்களுக்கான கொடுப்பனவு தபால் மூலம் கிடைக்கப்பெறும் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவு பிரதேச செயலகம் மூலம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.