;
Athirady Tamil News

நைஜரில் நாட்டை காக்க முன்வரும் தன்னார்வலர்கள்: ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள திட்டம்!!

0

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர். அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார். பாதுகாப்பின்மையை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி ஜூலை 26-ம் தேதி ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பசோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி (Abdourahamane Tchiani) என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார். ராணுவ அமைப்பு பதவி விலகி, பசோம் மீண்டும் பதவியில் அமர வைக்கப்படவில்லை என்றால் கூட்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் (ECOWAS) அறிவித்திருக்கிறது. இதனையடுத்து அந்நாட்டின் தலைநகரமான நியாமே (Niamey) நகரில் உள்ள குடிமக்கள் அங்கு தற்போது ஆளும் ராணுவ அமைப்பில் பல்லாயிரக்கணக்கில் தன்னார்வலர்களை சேர்த்து கொள்ள அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

எகோவாஸ் எடுக்க கூடிய ராணுவ நடவடிக்கையில் இருந்து தாய்நாட்டை காக்கும் வகையில் போரிடவும், மருத்துவ உதவிகள் செய்யவும், தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து செயல்பாடுகளில் உதவவும், பெருமளவில் தன்னார்வலர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர். இதன்படி 18 வயதை கடந்த எவரும் தானாக முன்வந்து சேவை செய்ய விரும்பினால் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.