மியான்மரில் சுரங்கம் இடிந்து விழுந்து 25 தொழிலாளர்கள் பலி!!
மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக லாபம் கிடைக்கும் இந்த தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மழைக் காலங்களில் வழக்கமாக சுரங்கத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்படும். ஆனால் நிலச்சரிவில் சிக்கியவர்கள், ஜேட் கனிமத்தை தேடி வந்த உள்ளூர்வாசிகள் என்று தெரியவந்துள்ளது. அண்டை நாடான சீனாவில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து இங்கு வந்து ஜேட் கணிமத்தை எடுக்கும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒழுங்குப்படுத்தப்படாத இந்த சுரங்கப் பணியில் ஆண்டுதோறும் ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கனிமத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. மீட்பு படையினர் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியானார்கள். மேலும் 14 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அங்கு பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.