டெல்லி நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் – கே.சி.வேணுகோபால் கடும் கண்டனம்!!
டெல்லி திருமூர்த்தி இல்லத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை (என்.எம்.எம்.எல்), பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (பி.எம்.எம்.எல்) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இந்தப் பெயர் மாற்றம் கடந்த 14-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக, அருங்காட்சியகத்தின் செயற்குழு துணைத்தலைவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருந்தார். மத்திய அரசின் இந்த பெயர் மாற்ற நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் நோக்கம், நேருவின் மரபை மறுப்பதும், அவமதிப்பதுமே என அக்கட்சி சாடியது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ஜவகர்லால் நேரு இந்திய மக்களின் இதயங்களில் வாழ்கிறார். பெயர்களை மாற்றுவது பழிவாங்கும் அரசியலின் ஒரு பகுதி என தெரிவித்தார்.