ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் இயங்குவதற்கு தடை – தலிபான்கள் அறிவிப்பு !!
ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை தலிபான்கள் கொண்டாடிய வேலையிலேயே இந்த விடயம் கூறப்பட்டது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பெண்கள் கல்வி கற்க தடை, மேலும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் புதிதாக அரசியல் கட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“ஷரியாத் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் செயல்பட ஷரியத்தில் அடிப்படை இல்லை. அவர்கள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை. அவர்களை தேசம் பாராட்டுவதில்லை” என்று தலிபான் அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அப்துல் ஹக்கீம் ஷரீ கூறினார்.
2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.