மிகக் குறைந்த வருமானம் கொண்ட நாடு இலங்கை !!
தெற்காசியப் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாகவும் கடந்த 17 வருடங்களில் இலங்கை தமது வருமான இலக்குகளை அடையத் தவறியுள்ளதாகவும் வெரிடே ரிசர்ச் என்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தில் வருவாயை அதிகரிப்பதற்கான உடன்பாட்டையும் இலங்கை உள்ளடக்கியுள்ளதாகவும் நிதியத்தின் வருமான இலக்குகள் தொடர்பான 12 நிகழ்ச்சி திட்டங்களில் 3 திட்டங்களை மட்டுமே இலங்கை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்படபட்டுள்ளது.
அரசாங்க வருமானத்தை ஈட்டுவதில் வரி வருவாய் கணிசமான பங்கை வகின்ற நிலையில், இந்த ஆண்டு வரி வருமானம் 3 ஆயிரத்து 130 பில்லியன் ரூபாயா இருக்கும் என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.
எனினும், இவ்வருட இறுதிக்குள் இலங்கை அரசாங்கத்தின் கணிப்பை விட குறைந்த வருமானத்தை அதாவது 2 ஆயிரத்து 940 பில்லியன் ரூபா வரி வருவாயைப் பெறும் என சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.
எனினும், வருடத்தின் முதல் காலாண்டில் 578 பில்லியன் ரூபாய் மாத்திரமே உண்மையான வரி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி வருட இறுதிக்குள் 2 ஆயிரத்து 762 பில்லியன் ரூபாவை மட்டுமே ஈட்டமுடியும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.