;
Athirady Tamil News

காலணிக்கு அக்கப்போரா? சொந்த கட்சி தோழமைகளை புரட்டி எடுத்த ஜடேஜா மனைவி!!

0

குஜராத் ஜாம்நகர் சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க. தலைவருமான ரிவாபா ஜடேஜா நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனாம்பென் மேடம் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய போது ரவிபா ஜடேஜா தனது காலணிகளை கழற்றினார். இவரின் இந்த செயலுக்கு எம்.பி. பூனாம்பென் மேடம் ரவிபா ஜடேஜாவிடம், “ஓவர் ஸ்மார்ட்” என்று கூறினார். எம்.பி. தன்னை நோக்கி ஆவேசமாக பேசினார் என்றும், தன்னை அதிக புத்திசாலி என்று கூறினார் என ரவிபா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அங்கு நின்று கொண்டிருந்த போது, பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் கூட நிகழ்ச்சிகளில் காலணிகளை கழற்றாமல் தான் மரியாதை செலுத்துகின்றனர், ஆனால் சிலர் அதிபுத்திசாலித்தனமாக நடந்து கொள்கின்றனர்,” என்று பேசியதாக ரவிபா தெரிவித்து இருக்கிறார்.

மேலும் “சுதந்திர தினத்தை முன்னிட்டு எம்.பி. உயிர்நீத்த வீரர்களுக்கு தனது காலணிகளை அணிந்த நிலையிலேயே மரியாதை செலுத்தினார். பிறகு, நான் எனது காலணிகளை கழற்றிவிட்டு மரியாதை செலுத்தினேன். மற்ற தலைவர்களும் இதேயை செய்தார்கள்,” என்று ரவிபா தெரிவித்தார். உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்த வந்த இடத்தில் ஒரே கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.