லண்டனில் உலகப்புகழ்பெற்ற அருட்காட்சியகத்தில் திருட்டு !!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் விலை மதிப்பு மிக்க பொருட்கள் திருடப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் வருடமொன்றில் பல தடவை கண்காட்சிகள் நடத்தப்படுவதால் வருடாந்தம் 60 இலட்சம் பேர்வரை பார்வையிடுகின்றனர். ஆனால் அண்மைக்காலத்தில் கண்காட்சிகள் எவையும் நடத்தப்படவில்லை.
இந்த வருட தொடக்கத்தில் நடத்தப்பட்ட கண்காட்சியில் இவை திருடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவரை அருட்காட்சியகத்தில் தலைவர் ஜோர்ஜ் பணிநீக்கம் செய்துள்ளார்.
அத்துடன் திருட்டுப்போன பொருட்களை மீட்பதற்கு முயற்சி எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த அருட்காட்சியகத்தில் கி.மு. 15-ம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர கற்கள், கண்ணாடிகள் போன்ற பல்வேறு பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.