;
Athirady Tamil News

நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக காடுகளுக்கு தீமூட்டும் திட்டமிட்ட கும்பல்கள்!!

0

நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக திட்டமிட்ட குழுக்கள் இந்த வருடம்மாத்திரம் 25000 ஏக்கர் வனங்களை தீக்கிரையாக்கியுள்ளன என சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தபோவ வனப்பகுதியில் 50ஏக்கர் வனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

வரட்சியான காலப்பகுதியிலேயே இந்த குழுக்கள் காடுகளை தீக்கிரையாக்குகின்றன என நில மற்றும்விவசாய சீர்திருத்தத்திற்கான இயக்கத்தின் சஜீவ சாமிகரதெரிவித்துள்ளார்.

வலயங்களில் திட்டமிட்ட குழுக்கள் காடுகளிற்கு தீமூட்டுகின்றன அரசாங்கம் எடுத்துள்ள தவறான கொள்கைகளால் இவ்வாறான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி காடுகளில் உள்ள நிலங்களை 11 மாவட்டங்களைசேர்ந்த பொதுமக்களிற்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார் ஆனால் இந்த நிலங்களை பல்வேறு தனியார்நிறுவனங்களிற்கு வழங்கஅரசாங்கம் விரும்புகின்றது என தெரிவித்துள்ள சாமிகர அரசாங்கம் இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த அரசாங்கம் முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தின் பின்னரே காடுகள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்

காடுகளுக்கு தீவைத்த 145 சம்பவங்கள் பெப்ரவரிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளன எனவும்அவர்தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.