இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுருவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் – நீதிமன்றில் ஆஜரானார்!!
மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே பௌத்தமதகுரு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
மெல்பேர்னின் தென்கிழக்கில் உள்ள தம்ம சரண ஆலயத்தின் மடாதிபதியான நாவோடுன்ன விஜித நாணயக்கார தேரர்16 வயதிற்குட்பட்டவர்களுடன் உடலுறவில் ஈடுபட்டது அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டது உட்பட 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
காவல்துறையினர் இந்த வாரம் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.மூவர் பௌத்தமதகுருவிற்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.
இந்த சம்பவங்கள் 1996 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட மதகுரு கெய்ஸ்பொரோ ஆலயத்தில் இருந்தவேளை இடம்பெற்றுள்ளன.
தேரர் பல சிறுமிகளிடம் அநாகரீகமான விதத்தில் நடந்துகொண்டார் என காவல்துறையின் விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளமை நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பௌத்தமதகுரு காவி உடையுடன் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.